பின்வரும் பக்கங்களில் ஓர் உண்மைக் கதையின் சுருக்கத்தை நாம் படிக்கவுள்ளோம். நீங்கள் கேட்ட அல்லது படித்த அநேக அருமையான கதைகளைப் போன்று தான் இதுவும். இருந்தாலும்,நீங்கள் இதைப் படிக்க படிக்க இதர கதைகளைப் போன்று இது ஒருசாதாரணமானகதையன்று என்று நன்றாக புரிந்துகொள்வீர்கள். இது நாம் யாரென்று நமக்கு எடுத்துச் சொல்லக்கூடிய கதை,நாம் யார் என்பதையும் நாம் யாராக மாறமுடியும் என்பதனையும் சிந்திக்கவைத்திடும் கதை. அப்படியானால்...

தேவன்

இருக்கிறார், இன்றைக்கு இருப்பதுபோலவே எப்போதும் இருக்கிறார். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதா? நம்முடைய முழுமையான புரிதலுக்கு எல்லாம் விஞ்சியவராக அவர் இருப்பதனால்தான் அப்படி!

ஆதியாகமம் 1:1 சங்கீதம் 90:2

படைப்பு

ஆரம்பத்தில், தேவன் சொன்னதுமேஎல்லாம் உண்டானது. அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து அண்ட சராசரம் உண்டானது மட்டுமல்ல, அதன்மேல் பிரமாண்டமாய் விளங்கும் விண்வெளிப்பாதைகளும், நடசத்திரங்களும், பூமி உட்பட ஏனைய கிரகங்களும் அமையப்பெற்று அதற்குள்ஏதேன் எனும் அழகான பரதீசின் செம்மையான தோட்டம் ஒன்றும் இருந்தது. தேவனின்அழகிய படைப்புகளிலே முத்தாய்ப்பாக அமைந்தது மனிதனும் மனுஷியும். தேவன் ஆதாமையும் ஏவாளையும் தம்முடைய சாயலாக தம்மை பிரதிபலிக்கும்படி படைத்தார். அவர்கள் உண்டாக்கப்பட்டதான உயர்வான நோக்கமே அவர்கள் தம்மை அன்புடன் தொழுதுகொண்டு, அவரை உண்மையாய் சேவித்து, அவருடன் ஒரு இனிதான உறவை பாராட்டவேண்டும் என்பதே.

ஒறுமைப்பாடு

தேவனுடைய வடிவமைப்பில் , படைக்கப்பட்டவைகள் அனைத்தும் ஒன்றோடொன்று இசைந்து காணப்பட்டதோடு அது எப்படி இருந்திடவேண்டுமோ அப்படியே இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் எவ்வித வலியோ, வேதனையோ, பாடுகளோ, நோய்களோ அல்லது மரணமோ இருந்ததில்லை. தேவனுக்கும் மனிதனுக்குமிடையேயும், ஆதாமுக்கும் ஏவாளுக்குமிடையேயும்,எல்லா படைப்பின்மேலும்ஒரு நிறைவான அன்பும், அங்கீகாரமும்அந்நியோந்நியமும் நிலவியது. ஆனால், பயங்கரமானதொரு காரியம் சம்பவித்தது...

கீழ்ப்படியாமை

ஆதாம் மற்றும் ஏவாள் தேவனுக்கு எந்த வகையிலும் நிகரானவர்கள் ஆல்ல என்றாலும்அன்பான தேவன் ஏதேனில் தான் படைத்த அனைத்தின் மீதும் இவர்களுக்கு ஆளுகையை கொடுத்தார். பூமி அனைத்தையும் ஆண்டுகொள்ளக்கூடிய அதிகாரத்தையும் முடிவுகளை எடுக்கக்கூடிய உரிமையையும் அவர்களுக்கு அருளின தேவன் ஒரேயொரு நிபந்தனையை மட்டும் விதித்தார்: குறிப்பிட்ட ஒரு மரத்தின் கனியை மட்டும் சாப்பிடக்கூடாது என்பதே அது. ஒரு நாள், தேவனுடைய எதிரியான சாத்தான் எனும் பெயர்கொண்ட விழுந்துபோன் தூதன் தேவனுடைய இடத்தைப் பிடிக்கவேண்டும் என்று ஒரு பாம்பின் உருவமெடுத்து ஆதாம் மற்றும் ஏவாளிடம் ஒரு பொய்யைச் சொன்னான். தேவன் நல்லவர் அல்ல என்றும் இவர்களுக்கு தேவன்சிறப்பானதை கொடுக்க விரும்பவில்லை என்று அவர்களை நம்பப் பணி வஞ்சித்தான். இதன் விளைவாக இவர்கள் அறிந்தே தேவனுக்கு கீழ்ப்படியாமல் போனார்கள். தேவனுக்கு விரோதமான செயலாக ஆதாமும் ஏவாளும் அந்த மரத்தின் கனியை சாப்பிட முற்பட்டது நன்மை தீமையை தேவனல்ல நாங்களாகவே தீர்மானித்துக்கொள்வோம் என்று முடிவுசெய்ததாய் அமைந்தது.

பின்விளைவு

அவர்களுடைய செயலின் வினை மிகவும் மோசமாய் அமைந்துவிட்டது! ஒரு வைரஸ் கிருமியைப் போலபாவமானது தேவனுடைய படைப்பிலும் ஆதாம் மற்றும் ஏவாளின் உள்ளத்திலும் பிரவேசித்துவிட்டது. தலைமுறை தலைமுறையாக பாவம், பாடுகள் மற்றும் வேதனைகள் தொடர்ந்துகொண்டேவந்தன. படைப்பின் வடிவமைப்பு உருத்தெரியாமல் சிதைந்துபோனது. நாம் வாழும் இந்த உலகை வாட்டிவதைத்துக்கொண்டிருக்கும் யுத்தம், வறுமை, வியாதி, பேராசை மற்றும் ஊழல் போன்றவைகளைப் பற்றிய கதைகளைப் நாம் படித்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். இவைகள் அனைத்துமே பாவத்தினால் உண்டானவிளைவுகளே!

ரோமர் 3:10 ரோமர் 3:19

தேவை

படைப்பின் ஆரம்பத்தில் காணப்பட்ட முழுநிறைவு மற்றும் அன்பைக் குறித்து நாம் சற்றே சிந்திப்போமானான் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு நாம்எவ்வளவுகுறைவுள்ளவர்களாகவும் பாவம் மிகுந்தவர்களாகவும் காணப்படுகிறோம் என்பதனை புரிந்துகொள்வோம். சற்று சிந்தித்துப் பாருங்கள் நம்மிடை உள்ள மனக்கசப்பு உணர்வு, நாம் சொல்லியிருக்கிற பொய்கள் மற்றும் நம் நினைவுகளை உரக்க சொல்லக்கூட தைரியம் இல்லை. நம்முடைய இருதயத்தை நாமே சற்று ஆராய்ந்தால் உண்மை நிலை தெரியவரும்: நாமெல்லாருமே குற்றவாளிகள். நாம் ஒவ்வொருவரும் பாவம் செய்துள்ளோம். அதனால் விளையும் இறுதிமுடிவானது சரீரப்பிரகாரமான மரணத்தைக் காட்டிலும் கொடிது. அன்பான தேவனிடமிருந்து நம்மை நிரந்தரமாய் பிரிக்கும் கொடிய வேதனையையும் அளவில்லா துக்கத்தையும் கொண்டுவரக்கூடிய முடிவாக அது இருக்கும். காரியம் இப்படிஇருப்பதனால், நாம் பின்வரும் கேள்விகளை கவனித்திடவேண்டும்: ஏதாவது செய்யமுடியுமா? இனி நம்பிக்கை என்ற ஒன்றுண்டா?

வாக்குறுதி அளித்தல்

ஆதாம் மற்றும் ஏவாள் பாவம் செய்ததால் தேவன் அவர்களை ஏதேனிலிருந்து விலக்கினாலும் அவர்களுக்கென்று ஒரு மீட்பு மற்றும் நம்பிக்கையின் வாக்குத்தத்தத்தை விட்டுவைத்தார். அவர்களுடைய சந்ததியில் தோன்றும் ஒருவர் ஒருநாளில்மனுவர்க்கத்தை பாவத்திலிருந்து மீட்டெடுப்பார்என்ற வாக்குத்தத்தத்தை விளம்பினார். முழு உலகின் இரட்சகராய் அவதரிக்கவிருக்கும் இந்த நபருக்கு தேவன் வழியை ஆயத்தப்படுத்தினார். அவருடைய வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவரது பிறப்பு, அவரது வாழ்க்கை மற்றும் அவரது மரணத்தைப் பற்றிய விவரங்கள் வேதாகமத்தில் துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருந்தன. சொல்லப்போனால், வேதாகமம் முழுவதும் மனித வரலாற்றின் மையப் புள்ளியாக இந்த நபரையே நமக்கு சுட்டிக்காட்டுகின்றது. அவருடைய வருகையின் நோக்கமே, “இழந்துபோனவைகளை தேடவும் இரட்சிக்கவுமே வந்தார் “(லூக்கா 19:10) அப்படியானால் யார் அந்த நபர்?

வாக்குறுதி நிறைவேற்றப்படுதல்

வாக்குரைக்கப்பட்ட இரட்சகர் வேறு யாருமல்ல, அவர் தேவன்.பழைய ஏற்பாட்டின் தீர்க்கத்தரிசனங்கள் அனைத்தும் நிறைவேறும் விதமாக 2000 ஆண்டுகளுக்கு முன் தேவன் இயேசுகிறிஸ்து எனும் நபரில் மனித உருவில் தோன்றினார். இயேசுவின் தாயார் திருமணமாகாத கன்னியாக இருந்ததால் அவரது பிறப்பு ஒரு அற்புதம். அவரது வாழ்க்கையும்தனித்துவம் நிறைந்ததாய் இருந்தது: எந்தவொரு பாவமுமின்றி அவர் தேவனுக்கு முழுமையாய் கீழ்ப்படிந்து அவருடன் குறைவில்லாத உறவை அனுபவித்தார். இதுவே இவரை தேவதிட்டத்தின்படி மனுவர்க்கத்தின் பாவத்திற்கான ஒட்டுமொத்த விலைக்கிரையம் செலுத்திடும் கொடிதிலும் கொடிதான சிலுவை மரணத்திற்கு முழுமனதுடன் ஒப்புக்கொடுக்கவும் செய்தது. இதுவரையில் இப்பூவுலகம் கண்டிராத இரக்கம் மற்றும் கிருபையின் உன்னதவெளிப்பாடாக இயேசுவின் வாழ்க்கை மற்றும் மரணம் அவர்மேல் நம்பிக்கை வைக்கும் அனைவருக்கும் பாவத்தின் பரிகாரமாய் அமைந்தது. நம்பிக்கையற்ற குற்றவாளியை பாவத்திலிருந்தும் சாத்தானின் பிடியிலிருந்தும் விடுவித்திட அப்பழுக்கற்ற அந்தப் புண்ணியர் சிலுவை மரணத்தை தன்மீது ஏற்றுக்கொண்டார்.

அவர் மரித்து அடக்கம் பண்ணப்பட்டாலும் கல்லறை அவரை அடக்கிடவில்லை. மூன்று நாளைக்குப் பின், கல்லறையிலிருந்து வெளியேறிய இயேசுவானவர், சிலுவை மரணத்தின் மூலம் பாவத்தை ஜெயித்தவராகவும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து மரணத்தை ஜெயித்தவராகவும் இவ்வாறு பூமியில் தன் எடுத்துக்கொண்ட பணியை – தேவன் வாக்குரைத்தவண்ணம் - வெற்றிகரமாய் செய்துமுடித்தார். நாற்பது நாட்கள் கழித்து அவர் பரலோகத்திற்கு திரும்பினார், நீதியுள்ள இராஜனாக இப்போதும் அரசாளுகிறார்.

ஆனாலும் இந்தக் கதை இங்கே முற்றுப் பெறவில்லை...

1 பேதுரு 3:18 கலாத்தியர் 1:4

எல்லாம் புதிதாயின

இயேவின்மேல் மட்டும் நம்பிக்கை வைத்திடும் அனைவருக்கும் தேவன் எல்லாவற்றையும் புதிதாக்குவேன் என்ற வாக்கை கொடுத்துள்ளார். பாவமும் சுயநலமும் அறவே இல்லாத புதிய வானம் மற்றும் புதிய பூமி– தேவனுடனும், மற்றவர்களுடனும், அனைத்து படைப்புகளுக்கிடையேயும் ஒரு செம்மையான நட்புறவின் பூமியாக அது காணப்படும். இனியும்பூமியில்உலுக்கிப்போடும் நிலஅதிர்ச்சி, பயங்கர சுனாமிஅல்லது மிரட்டும் புயல்காற்று போன்றவைகள் ஆட்டிப் படைக்காது. எந்தவொரு வலியோ, வேதனையோ, உடைந்துபோன உள்ளமோ, வியாதி அல்லது மரணமோ நம்மை கலவரப்படுத்தாது. எல்லா காரியங்களும் ஆரம்பத்தில் எப்படி இருக்கும்படிக்கு உண்டாக்கப்பட்டதோ அந்த நிலைக்கு திரும்பும்.

புதிய பூமி தேவன் தன் படைப்பிற்கென்று உண்டாக்கின செவ்வையான உறைவிடமாக மறுபடியும் திகழும். தேவனுடைய உண்மையான திட்டம் இப்போது செழித்தோங்கிடும், ஏனென்றால் அவருடைய மீட்பில் நம்பிக்கையுடையோர் தேவனை ஆராதிக்கவும், அவர்மேல் அன்பு கூரவும், அவரை சேவிக்கவும் அவருடன் முடிவில்லாத ஒர் உறவில் தங்களை உட்படுத்திகொண்டு அதிலே எப்போதும் அகமகிழ்வார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 21:4

தேவனுடன் எப்போதும்

இந்தப் புதிய உலகின் மிகமிக அற்புதமான அம்சம் என்னவென்றால் நாம் தேவனுடன் நிரந்தரமாய், எப்போதும் வாசம் செய்து நிறைவான மகிழ்ச்சியை அனுபவித்துக்கொண்டே இருப்போம் என்பதே. நம்மை படைத்த, நம்மேல் அன்புகூர்ந்த, நமக்காக மரித்தவருடன் ஒரு முழுமையான உறவுமுறைக்கு மறுபடியும் திரும்புவோம். அறிஞரும், சிறுபிள்ளை எழுத்தாளருமான சி.எஸ்.லூயிஸ் அவர்கள் இந்த புதிய உலகத்திற்குள் நாம் அடியெடுத்தும் வைக்கும் முதல் காலடியை பற்றி குறிப்பிடும்போது, “அது, பூமியில் இதுவரையில் ஒருவரும் படித்திராத ஓர் கதையின் முதலாம் அத்தியாயம். அது முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டேபோகும்: அதிலே வரும் ஒவ்வொரு அத்தியாயமும்முந்தைய அத்தியாயத்தைவிட சிறப்பாய் இருக்கும்”

இந்தக் கதையில் உங்களுடைய பங்கு என்ன?

படைப்பிலிருந்து புதிதாக்கம் வரை தேவன் ஒரு அற்புதமான கதையை எழுதுகிறார். அந்தக் கதையின் ஒரு பகுதியாக அவரை ஆராதிக்கும்படி, அவரை சேவிக்கும்படி மற்றும் அவருடன் ஒர் உறவை அனுபவித்திட உங்களை அவர் படைத்துள்ளார். இந்தக் கதையில் நீங்கள் தேவனுடன் இணைந்து வாழ்க்கையின் படைப்பாளியை அறியும்பொழுது நீங்கள் மன்னிப்பு, வாழ்க்கையின் நோக்கம் மற்றும் ஆத்தும திருப்தியை பெற்றுக்கொள்வீர்கள்

விசுவாசத்தினால் மட்டுமே வரும் மீட்பு

விசுவாசம் என்பது இயேசு மட்டுமே உங்களை காப்பாற்றமுடியும் என்று முழு மனதாய் நம்புவது. பாவத்தினால் உண்டான விளைவிலிருந்து உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்று நம்பவுதைவிட தம் மரணத்தினால் உங்களுடைய மீட்பைவாங்கிக்கொடுத்த அவர் மேல் உங்களை நம்பிக்கையை வைப்பதுதான் விசுவாசம். உங்களுடைய பற்று இப்போது இருக்கவேண்டியது இராஜாவாகிய இயேசுவின் மேல் மட்டுமே. இயேசுவைத் தவிர வேறு எதன்மீதும் தங்கள் நம்பிக்கையை வைப்பவர்கள் பாவத்தின்அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவித்திட தமது ஒரே குமாரனை நமக்கு கொடுத்த தந்த அந்த அன்புள்ள தேவனிடமிருந்து நித்திய காலமும் பிரிக்கப்படுவார்கள். இந்த வேதனைமிகு பிரிவின் பெயர்தான் நரகம்.

எபேசியர் 2:8–9

பதில்

யுகாயுகமாய் எழுதப்பட்டுவரும் இந்தக் கதையின் ஒரு பங்காக இருக்கும்படிக்கு தேவன் உங்களை அழைக்கிறார். இன்றைக்கே அவர் உங்களுக்கு இரட்சிப்பை அருள விரும்புகிறார். அதுவே தேவன் உங்கள் முன் வைக்கும் மீட்பிற்கான அழைப்பாகவும் உள்ளது. தேவனுடைய இந்த மீட்பின் திட்டத்தை நீங்கள்எளிதாக ஏற்றுக்கொள்ளலாம். எப்படி?:

  • தேவனிடம் உங்கள் தேவையை ஒப்ப்புக்கொள்ளுதல்
  • தேவன் உங்களை மன்னித்து, பாவத்திலிருந்து உங்களைத் திருப்பிடவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுதல்
  • இயேசுவால் மட்டுமே உங்களை மீட்கமுடியும் என்று நம்புதல்
  • விசுவாசத்தில் இந்த நாள் முதற்கொண்டு இனிவரும் நாட்களிலெல்லாம் உங்களுடைய வாழ்க்கையின் இராஜனாக மாறிவிட்ட இயேசுவையே பின்பற்றுதல்

நீங்கள் எப்போது இயேசுவின்மேல் உங்களுடைய நம்பிக்கையை வைத்தீர்களோ, அப்போதே நீங்கள் தேவனுடைய பிள்ளையாகமாறிவிட்டீர்கள், தேவனுடைய ஆவி உங்களுக்குள் வாசம்பண்னவும் வாழவும் அரம்பித்துவிட்டது. தேவனுடனான உறவில் நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு வளருகிறீர்களோ, கூடுதலாய் உங்களுடைய வாழ்க்கையில் அவருடைய கதையை பார்க்கவும் புரிந்துகொள்ளவும் செய்வீர்கள். உங்களுடைய கடந்தகாலம் மற்றும் எதிர்கால பாவங்கள் எல்லாமே மன்னிக்கப்பட்டுவிட்டது, இப்போது அவருக்கு முன்பாக நீங்கள் ஒரு முழுமையான அங்கீகாரத்தையும்பெற்றிருக்கிறீர்கள். இந்த உறவுக்குள்ளாக நீங்கள் காலடி எடுத்து வைக்கும்போது, இயேசுதாமே உங்களுடைய வாழ்க்கையின் உயர்விலும் தாழ்விலும், இன்பத்திலும் துன்பத்திலும் உங்களுடன் இருப்பேன் என்று வாக்களிக்கிறார். ஒரு நிரந்தரமான,மாறாத அன்பினால் அவர் உங்களை நேசிக்கிறார். நித்திய வாழ்க்கையை மட்டும் அவர் உங்களுக்கு வாக்களிக்கவில்லை, அவர் வந்தது உங்களுடைய வாழ்க்கைக்கான நோக்கத்தையும், நிறைவையும், விடுதலையையும் நீங்கள் பெற்று அனுபவிக்கவேண்டும் என்பதற்கே.

யோவான் 6:47

TheStoryFilm.com