பதில்

யுகம்யுகமாய் எழுதப்பட்டுவரும் இந்தக் கதையின் ஒரு பங்காக இருக்கும்படிக்கு தேவன் உங்களை அழைக்கிறார். இன்றைக்கே அவர் உங்களுக்கு இரட்சிப்பை அருள விரும்புகிறார். அதுவே தேவன் உங்கள் முன் வைக்கும் மீட்பிற்கான அழைப்பாகவும் உள்ளது. தேவனுடைய இந்த மீட்பின் திட்டத்தை நீங்கள் எளிதாக ஏற்றுக்கொள்ளலாம். எப்படி:

  • தேவனிடம் உங்கள் தேவையை ஒப்புக்கொள்ளுதல்
  • தேவன் உங்களை மன்னித்து, பாவத்திலிருந்து உங்களைத் திருப்பிடவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுதல்
  • இயேசுவால் மட்டுமே உங்களை மீட்கமுடியும் என்று நம்புதல்
  • விசுவாசத்தில் இந்த நாள் முதற்கொண்டு இனிவரும் நாட்களிலெல்லாம் உங்களுடைய வாழ்க்கையின் இராஜனாக மாறிவிட்ட இயேசுவையே பின்பற்றுதல்
ஆம், நான் மீள விரும்புகிறேன்! ஒரு கேள்வி கேட்கவும்

நீங்கள் எப்போது இயேசுவின்மேல் உங்களுடைய நம்பிக்கையை வைத்தீர்களோ, அப்போதே நீங்கள் தேவனுடைய பிள்ளையாகமாறிவிட்டீர்கள், தேவனுடைய ஆவி உங்களுக்குள் வாசம்பண்னவும் வாழவும் அரம்பித்துவிட்டது. தேவனுடனான உறவில் நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு வளருகிறீர்களோ, கூடுதலாய் உங்களுடைய வாழ்க்கையில் அவருடைய கதையை பார்க்கவும் புரிந்துகொள்ளவும் செய்வீர்கள். உங்களுடைய கடந்தகாலம் மற்றும் எதிர்கால பாவங்கள் எல்லாமே மன்னிக்கப்பட்டுவிட்டது, இப்போது அவருக்கு முன்பாக நீங்கள் ஒரு முழுமையான அங்கீகாரத்தையும்பெற்றிருக்கிறீர்கள். இந்த உறவுக்குள்ளாக நீங்கள் காலடி எடுத்து வைக்கும்போது, இயேசுதாமே உங்களுடைய வாழ்க்கையின் உயர்விலும் தாழ்விலும், இன்பத்திலும் துன்பத்திலும் உங்களுடன் இருப்பேன் என்று வாக்களிக்கிறார். ஒரு நிரந்தரமான,மாறாத அன்பினால் அவர் உங்களை நேசிக்கிறார். நித்திய வாழ்க்கையை மட்டும் அவர் உங்களுக்கு வாக்களிக்கவில்லை, அவர் வந்தது உங்களுடைய வாழ்க்கைக்கான நோக்கத்தையும், நிறைவையும், விடுதலையையும் நீங்கள் பெற்று அனுபவிக்கவேண்டும் என்பதற்கே.


இப்பொழுது மீட்புக்கு இயேசுவை மட்டுமே நீங்கள் நம்பியுள்ளீர்கள் என்பதால், உங்களுக்காக பிரார்த்தனை செய்யவும், உங்கள் நம்பிக்கையில் அடுத்த அடிகளை எடுத்து வைக்க சில வளங்களைக் கொடுக்கவும் விரும்புகிறோம்:

Request Received!

ஒரு கேள்வி கேட்கவும்

கேள்வி அனுப்பப்பட்டது